'நடிகையர் திலகம்' படத்துக்கு 'யு' சான்றிதழ்

'நடிகையர் திலகம்' படத்துக்கு 'யு' சான்றிதழ்

1 mins read
760838b3-db10-47a9-afad-0458275e2a70
-

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'நடிகையர் திலகம்' படத்துக்கு, தணிக்கைக்குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மதுரவாணி என்ற செய்தியாளர் வேடத்தில் சமந்தாவும், விஜய் அந்தோணி என்ற புகைப்படக் கலைஞர் வேடத்தில் 'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர்.