தமிழ்ச் சினிமாவில் வரலட்சுமிக்கான நல்ல நேரம் துவங்கிவிட்டது போலும். வரிசையாக நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில் லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களம் கொண்டவை. அதிலும் 'வெல்வெட் நகரம்' ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்கிறார் வரலட்சுமி. அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன் இயக்கும் படம் இது. "நம் எல்லோரிடத்திலும் ஒரு மிருகம் உறங்கிக் கொண்டே இருக்கும். அது நல்ல மிருகமா, கெட்ட மிருகமா என்பது நமக்கு மட் டுமே தெரியும். பொதுவாக அந்த மிருகத்தை நாம் நாகரிகம் என்ற போர்வையில் நாம் கட்டிப்போட்டிருக்கிறோம்.
"கோபம் வந்தால் மற்றவனை அடித்தே கொல்பவர்களும் இருக்கிறார்கள். மன்னித்து ஒரு புன்முறுவலோடு ஒதுங்கிப் போகிறவர் களும் உள்ளனர். அந்த நாகரிகம் என்ற சங்கிலி உடைந்தால் சென்னை நகரம் எப்படி இருக்கும்? "'வெல்வெட் நகரம்' போன்று இருக்கும்! இது ஒரு நகரத்தில், இரவு நேரத்தில் நடக்கும் கதை," என்கிறார் மனோஜ்குமார் நடராஜன். மொத்தம் 48 மணி நேரத்தில் நடந்து முடிகிற கதையாம். கொடைக்கானலில் வசிக் கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஆதாரம் தேடி சென்னை வரு கிறார் செய்தியாளர் வரலட்சுமி. சென்னையில் அவர் சந்திக்கும் அனுபவங்கள் எதிர்பாராததாக அமைகிறது.
மேலும் செய்திகள் epaper.tamilmurasu.com.sg

