மாறுபட்ட வேடத்தில் ரகுல் பிரீத்

மாறுபட்ட வேடத்தில் ரகுல் பிரீத்

1 mins read
b3b6d39c-7380-4425-a202-47baac28362d
-

'என்ஜிகே' படத்தில் மிகவும் அருமையான வேடம் கிடைத்திருக்கிறது என பூரிப்புடன் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங். இதுவரை அவர் நடித்திராத மாறுபட்ட வேடம் என்றும் கூறியுள்ளார். அண்மைக் காலமாக இயக்குநர் செல்வராக வனைப் பற்றி ரகுல் பிரீத் பாராட்டித் தள்ளுவது தெரிந்த சங்கதிதான். அவரது இயக்கத்தில் உருவாகும் 'என்ஜிகே' படத்தில் ரகுல்தான் நாயகி. இந்தப் படம் தனது திறமையை பறைசாற்றும் என்கிறார் ரகுல். "எனது நடிப்புத் திறமை நன்றாக வெளிப்படும் பாத்திரத்தை செல்வராகவன் எனக்கு கொடுத்து இருக்கிறார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். "தென் இந்திய படங்களில் மட்டுமல்ல, இந்திப் படங்களிலும் நடித்து விட்டேன். ஆனால் தமிழ்ப் படங்களில் நடிக்கும் போது கிடைக்கும் மனத்திருப்தி மிகவும் அலாதியானது," என்கிறார் ரகுல்.

மேலும் செய்திகள் epaper.tamilmurasu.com.sg