விவசாயத்தில் ஆர்வம் காட்டும் ரம்யா பாண்டியன்

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் ரம்யா பாண்டியன்

1 mins read
dc8c97f7-425c-4152-83fa-5769592575a9
-

தனது வீட்டிலேயே அழகான தோட்டம் அமைத்து இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் இளம் நாயகி ரம்யா பாண்டியன். தன் வீட்டு மாடியில் உள்ள அந்தத் தோட்டத்தில் பாலக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள், கத்தரி, வெண்டை, வெள்ளரி என பல்வேறு காய்கறிகளை வளர்த்து வருவதாகச் சொல்கிறார். "என் வீட்டுத் தோட்டத்து காய்கறிகளைக் கொண்டே தினமும் சமைத்துச் சாப்பிடு வோம். அதில் தனி சுகம் இருக்கிறது. இந்தக் காய்கறி களில் கூடுதல் சுவை இருப்ப தாகவும் தோன்றுகிறது," என்கிறார் ரம்யா.

இவரது பெற்றோரின் சொந்த ஊர் குற்றாலம் அருகே உள்ளதாம். எனவே ஒவ்வொரு கோடைக் காலத்திலும் குற்றாலத்திற்கும் அதைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வது வழக்கமாம். "சுற்றுலாவோடு, உறவினர்களையும் பார்த்துவிட்டு திரும்புவதில் எல்லையில்லா மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்த ஆண்டும் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்," என்று குதூகலிக்கிறார் ரம்யா பாண்டியன்.