'அனைத்திலும் தனித்துவம் இருக்கும்'

'அனைத்திலும் தனித்துவம் இருக்கும்'

1 mins read
be22d2db-17d4-49ef-ac7f-fe3021c5cb0c
-

தமது நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது தனித்துவம் இருக்கும் என்கிறார் நடிகை இந்துஜா. கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். 'மெர்க்குரி' படத்தில் இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். "முதலில் தமிழகம் தவிர மற்ற இடங்களில்தான் 'மெர்க்குரி' திரைப்படம் வெளியானது. எப்போது தமிழகத்தில் வெளியாகும் என ஒருவித படபடப்புடன் காத்திருந்தேன். படம் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டு கிடைத்தபிறகே படபடப்பு குறைந்தது," என்கிறார் இந்துஜா. அடுத்து உதயநிதியுடன் இவர் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் தொடங்க உள்ளதாம். மொத்தத்தில் தமது சினிமா வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்கிறது என்கிறார் இந்துஜா.