பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள 'நடிகையர் திலகம்' படம் குறித்து புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இப்படத்தில் ஜெமினி கணேசனின் முதல் மனைவி வேடத்தில் மாளவிகா நாயர் நடித்துள்ளார் என்பதே அண்மைய தகவல். அதே போல் நடிகை சாவித்திரியின் தோழியான சுசீலாவாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இது தொடர்பான காணொளிப் பதிவு ஒன்றை நடிகை காஜல் அகர்வால் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.
'நடிகையர் திலகம்' படத்தில் மாளவிகா
1 mins read
-

