விஷால் படத்துக்கு திடீர் முட்டுக்கட்டை

1 mins read
89b52a65-07a3-47b0-9513-a54f4db0dcf7
-

விஷால் நடிக்கும் 'இரும்புத் திரை'க்கு புதிய சிக்கல் எழுந் துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரைச் சந்திக்க இருப்பதாக தயாரிப்பாளரும் விநியோகிப் பாளருமான பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களின் நலன் கருதி விஷால் நிறைய நல்ல விஷ யங்களை செய்துள்ளதாகவும், அதனால் இப்படத்தை தாம் வெளி யிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

"விஷாலின் 'இரும்புத்திரை' படத்தை வெளியிட விடாமல் சிலர் சதி செய்கிறார்கள். "அவர்களுக்கும் விஷாலுக்கும் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். அதற்காக படத்துக்கு தடை ஏற் படுத்துவது சரியல்ல. எங்களை ஏன் நசுக்குகிறீர்கள்? "நிறைய நடிகர்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். சிவ கார்த்திகேயன் ஒருமுறை கண்ணீர் விட்டு அழுதார். நடிகர் லாரன்சும் பாதிக்கப்பட்டுள்ளார். யாரோ செய்த தவற்றுக்கு நாங்கள் என்ன செய்வோம்?" என்று செல்வகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

'இரும்புத்திரை' படத்தின் ஒரு காட்சியில் விஷால், சமந்தா