புதிய படம் ஒன்றில் ஏழு வயது குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார் நடிகை நந்திதா. இது ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் கதை. கதை நாயகனாக விஜய் வசந்த்தும், கவுரவ வேடம் ஒன்றில் முன்னணி நாயகனும் நடிக்க இருப்பதாகத் தகவல். கீதா ராஜ்புத் இப்படத்தைத் தயாரித்து இயக்குகிறார்.
"இந்தப் படத்துக்கு 'நர்மதா' என தலைப்பு வைத்துள்ளனர். நீண்ட நாட்களாகவே பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கவேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது.
"'நர்மதா' என் திரை வாழ்வை நிச்சயம் கவனிக்கத்தக்க முக்கியப் படமாக அமையும் என நம்புகிறேன். அந்த அளவுக்கு இப்படத்தின் கதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ரசிகர்களையும் கவரும் என்பது உறுதி," என்கிறார் நந்திதா.

