கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம். ஆனால் இப்போது அந்தப் படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவித் துள்ளார் கே.வி.ஆனந்த். மோகன்லாலைப் பொறுத்தவரை இளம் நடிகர்கள் படங்களில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயங்காதவர். சில ஆண்டுகளுக்கு முன் 'ஜில்லா' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் மோகன் லால். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் ஜூனியர் என்.டி. ஆருடன் 'ஜனதா கேரேஜ்' என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மோகன்லாலுடன் இணையும் சூர்யா
1 mins read
-