புதுக் கட்சி; பீதியைக் கிளப்பும் 'பிக்பாஸ்' ஜூலி

புதுக் கட்சி; பீதியைக் கிளப்பும் 'பிக்பாஸ்' ஜூலி

1 mins read
9b2ebc1c-497a-42a6-a63f-f75a6eb23113
-

ஜல்லிக்கட்டுப் போராட்டம், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆகியவற் றின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, தற்போது சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். நீட் தேர்வு தொடர்பில் உயிரிழந்த அனிதாவின் வாழ்க்கை படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டுவிட்டரில் அவர் பதிவேற்றம் செய்துள்ள காணொளி ஒன்றில், "ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? கமல் ஆட்சியைப் பிடிப்பாரா? மாட்டாரா? ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் என்ன செய்வார். இவர்கள் செய் யும் கூத்து தாங்க முடியவில்லை. நம் மக்களுக்கு யார் நல்லது செய்வாங்க. நானும் துவங்கப் போகிறேன் ஓர் அரசியல் கட்சி. விரைவில் அறிவிக்க போகி றேன்," எனப் பேசியிருக்கிறார். இதைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள், "என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை? ரஜினி, கமல், பாலாஜி வரிசையில் முதலமைச்சர் போட் டியில் குதித்தார் வீரத் தமிழச்சி ஜூலி. இன்னும் வாழ்க்கையில் என்ன கொடுமை எல்லாம் பார்க்கணுமோ," என ஜூலியைக் கிண்டல் செய்து வருகின்றனர்.