நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடிக்க ஆர்வமிருந்தும் யாரும் தனக்கு வாய்ப்புத் தர வில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார் பாவனா. நடிகை பாவனா படத் தயாரிப் பாளர் நவீனைக் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண் டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பாவனா. ஆனால் அண்மைக்காலமாக தமிழ்ப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து மலையாளம், கன்னடப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
நயன்தாரா, திரிஷா, மஞ்சு வாரியர், காஜல் அகர்வால் போன்ற நடிகைகளுக்கு மட்டுமே கதா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது என்று கூறிய அவர், "ஆண் ஒருவரை மையமாக வைத்துக் குடும்பம் நடப்பதுபோல் திரைப்படத்தின் கதைகளும் அப் படியே நகர்கின்றன.

