'கொமரம் புலி' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையில் அறிமுகமானார் நிகிஷா படேல். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'தலைவன்' படத்தின் மூலம் தமிழ்த் திரையில் காலடி எடுத்து வைத்தார். தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 'பாண்டி முனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், "முன் னணி நடிகருக்கு ஜோடியாகவும் கதாநாயகிக்கு முக் கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்றார். அப்போது, பிரபு தேவாவுடன் இணைந்து நடிப் பீர்களா என்று நிகிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நீங்கள் அவரு டன் நடிப்பதைப் பற்றி கேட்கிறீர்கள். ஆனால் நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்," என்று கூறி அதிர்ச்சியளித்தார்.
பிரபுதேவாவை மணக்க விரும்பும் நிகிஷா
1 mins read
-

