தயாரிப்பாளர் சங்கத்துக்குப் புதிதாக தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து 54 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டம் காரணமாக தமிழ்த் திரையுலகத்தி னருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஷாலுக்கு எதிராக ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர் வாக்குறுதிகளை மீறிச் செயல்பட்டதாகவும், உடனடியாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், நடிகர்கள் ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வலுக்கும் எதிர்ப்பு
1 mins read
-

