தமிழ்த்திரையுலகை நாடி வரும் தெலுங்கு நாயகர்கள்

தமிழ்த்திரையுலகை நாடி வரும் தெலுங்கு நாயகர்கள்

1 mins read
ea1ccdaf-1c68-4118-ac0d-c5f825b9436e
-

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகர்களின் பார்வை தற்போது கோடம்பாக்கம் மீது பதிந்திருக்கிறது. தாங்கள் நடிக்கும் படங்கள் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளி யாக வேண்டும் என அவர்கள் விரும்புவதாகத் தகவல். ராம் சரண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு நாயகர்களின் படங்க ளுக்கு தற்போது தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த மாதத்தில் இம்மூவரும் நடித்த புதுப் படங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து வெளியாகின.

மூன்று படங்களுக்குமே வசூல், விமர்சன ரீதியில் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத் துள்ளதாம். இதனால் தமிழ் நாயகர்கள் மத்தியில் லேசாக கவலை கிளம்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. ராம்சரண் நடித்த 'ரங்கஸ் தலம்' படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் ரூ.1.01 கோடி வசூலித்தது. அந்த வசூலைத் தாண்டி ரூ.1.15 கோடியை வசூலித்தது மகேஷ் பாபுவின் 'பாரத் அனே நேனு'. இந்த வசூல்களைக் கடந்து, வெளியான இரண்டே நாட்களில் ஒரு கோடி ரூபாய் வசூல் கண் டது அல்லு அர்ஜுனின் 'நா பேரு சூர்யா' படம். அண்மையில் வெளியான தமிழ்ப் படங்களில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மட்டும்தான் வசூல் ரீதி யில் வெற்றி கண்டுள்ளதாகத் தகவல். ஆனால் மூன்று தெலுங்குப் படங்கள் அடுத்த டுத்து வெளியாகி வசூலைக் குவித்துள்ளன.

'ஸ்பைடர்' படத்தின் ஒரு காட்சியில் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங்.