'காளி' படம் வெளியீடு காண உள்ள நிலையில், அதில் நடித்தது தமக்கு மிகுந்த மனத்திருப்தியை அளித்தி ருப்பதாகச் சொல்கிறார் நடிகை சுனைனா. படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியின் எளிமை தம்மை வெகுவாகக் கவர்ந்த தாகவும் அவர் கூறியுள்ளார். 'வணக்கம் சென்னை' படத்தை அடுத்து கிருத் திகா உதயநிதி இயக்கத் தில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'காளி'. இதில் சுனைனாவுடன் அஞ்சலி, ஷில்பா மஞ்சு நாத், அம்ரிதா ஆகியோ ரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இதையடுத்து பேசிய சுனைனா, "காளியின் மையக் கருத்தே அன்பை பகிர்ந்து கொள்வதுதான்," என்றார். இதுவரை 19 படங்களில் நடித்தி ருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இன்றள வும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் பட படப்பாக உணர்வதாகத் தெரிவித்தார். "தொடக்க காலத்தில் ஒருமுறை செய்தியாளர் சந்திப்பின் போது அழுதே விட்டேன். அதை நினைக்கும்போது இப்போது உள்ள நிலைமை பரவாயில்லை. "இது போன்ற ஒரு சிறப்பான படத் தில் பணிபுரிந்தது பெருமை. மனத்திருப் தியுடன் இதைச் சொல்கிறேன்," என்றார் சுனைனா.

