கவர்ச்சியில் அசத்திய கதாநாயகி

கவர்ச்சியில் அசத்திய கதாநாயகி

1 mins read
eb860b2a-0f21-451e-a5af-9f4f1e5bb5b4
Google News Preferred Icon

நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதும் உடை அணிவதும் வழக்கமான ஒன்றுதான். சில நடிகைகள் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள். நடிகை கங்கனா ரணாவத்தும் தற்போது கவர்ச்சியில் அசத்தி உள்ளார். முதன் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க அவருக்கு இந்த ஆண்டு அழைப்பு வந்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்துடன் அதில் கலந்துகொண்டார் கங்கனா. சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்ற பின்னர், திடீரென தங்கும்விடுதி அறைக்குச் சென்று திரும்பியவர், மிகக் கவர்ச்சியான உடையுடன் விழா நடந்த பகுதியில் வலம் வந்தார். இது, கங்கனாவைப் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இந்த அளவு கவர்ச்சியை எதிர்பார்க்காத புகைப்படக் கலைஞர்கள் அவரை சூழ்ந்துகொண்டு அவரை ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்தனர். தற்போது இந்தப் படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.