'மைனா' போல் உருவாகி உள்ள புதுப்படம்

'மைனா' போல் உருவாகி உள்ள புதுப்படம்

1 mins read
cf4ba51b-f145-4491-b1e1-713d0fcee028
-

நடன இயக்குநர் தினே‌ஷுக்கும் தமக்கும் இடையே அண்ணன், தம்பிக்குரிய பாசம் இருந்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை யில் நடைபெற்ற 'ஒரு குப்பைக் கதை' படத்தின் பாடல் வெளி யீட்டு விழாவில் பேசிய அவர், அப்படத்தை தாமே வெளியிட இருப்பதாகக் குறிப்பிட்டார். நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் இப் படத்தைப் பார்த்தபோது 'மைனா' படத்தின் தாக்கத்தை உணர முடிந்ததாக அவர் பாராட்டினார். 'காளி' ரங்கசாமி இயக்கி யிருக்கும் இப்படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ள நிலையில், ரெட் ஜயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது. "தினேஷ் மாஸ்டருக்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ்தான் நடனம் சொல்லித் தந்தார்.

'ஒரு குப்பைக் கதை' படத்தில் தினேஷ், மனிஷா யாதவ்.