"தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்திருப்பதால் சிலர் இப்படி தவறாக நினைத்துள்ளனர். நான் அச்சு அசல் தமிழ்ப் பெண்." தொடர்ந்து இரண்டு, மூன்று நாயகிகள் உள்ள கதைகளாகத் தேர்வு செய்கிறீர்களே? "இதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனெனில், எனக்கு கதை மட்டுமே முக்கியம். அதன்பிறகு எனக்கான கதாபாத் திரத்தை ஆய்வு செய்வேன். "எனக்கு எந்தளவு முக்கியத்துவம் தரப்படும் என்பதைக் கணக்கிடும் அதே வேளையில், மற்ற நாயகிகள் யார், அவர்களுக்கு அதிக முக்கி யத்துவம் அளிக்கப்படுமா? என்றெல்லாம் நான் யோசிப்பதே இல்லை. "இதுதான் உன் கதாபாத்திரம் என்று சொல்லிவிட்டால் போதும். பிடித்து இருந்தால் நடிப்பேன், அவ்வளவுதான்," என்று ரெஜினாவின் பதில் கச்சிதமாக, கறாராக வெளிப்படுகிறது.
ரெஜினா: நான் தமிழ்ப்பெண்
1 mins read
-

