தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி என்பது தெரிந்த சங்கதி. ஆனால் அவர் ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் என்பது புதுத்தகவல். அதிலும், அவரது கதாபாத்திரத்துக்கு 'அராத்து ஆனந்தி' என்று பெயர் வைத்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கி வரும் 'மாரி 2' படத்தில்தான் சாய் பல்லவிக்கு இப்படியொரு கதாபாத்திரம் அமைந்துள்ளது. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடங்கியபோதே இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது. வேலை நிறுத்தத்திற்குப் பின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் சாய் பல்லவி பங்கேற்றுள்ளாராம். கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா, 'கல்லூரி' வினோத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'அராத்து ஆனந்தி' ஆன சாய் பல்லவி
1 mins read
-

