நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவது குறித்த கேள்விக்கு பதில் ரகுல் ப்ரீத் சிங், முதலில் நடிகர்கள் தங்களது சம்பளம் பற்றி பேசட் டும், பிறகு நான் சொல்கிறேன் என்று அதிரடியாகக் கூறியுள்ளார். கன்னடத்தில் அறிமுகமாகி தமி ழுக்கு வந்த ரகுலுக்கு தமிழ்ப் படங்கள் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. அதன்பிறகு தெலுங்குப் படங் களில் நடித்த அவர் அங்கு முதல் இடத்தைப் பிடித்தார். பின்னர் தமிழ் சினிமா அவரைத் தேடிப் போனது.
கார்த்தி ஜோடியாக இவர் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் சம்பளம் ரூ.1.5 கோடியாக உயர்ந்தது. தற்போது சிவகார்த்தி கேயன், சூர்யா, கார்த்தி, என்று முன்னணி நடிகர் களுடனும் நடித்து வருகி றார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில், தமிழ் சினிமாவில் 40 நாட் களுக்கு மேல் நடந்த வேலைநிறுத்தத்துக்குப் பிறகு நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தைக் கு றை க் க வே ண் டு ம் என்ற கோரிக்கை வலு வாக எழுந்துள்ளது. நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவதாக எழுந்த கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், "முதலில் நடிகர்கள் எவ்வளவு சம் பளம் வாங்குகிறார்கள் என்பதை வெளிப்படை யாகச் சொல்லட்டும்.
அதன் பிந்னர் நடிகை களுடைய சம்பளத்தைப் பற்றிக் கேளுங்கள். "கண்டிப்பாக நடிகர் களைவிட நாங்கள் பல மடங்கு குறைவாகத் தான் சம்பளம் வாங்கு கிறோம். " தி ரை த் து றை யி ன ர் எல்லாருமே வருமான வரி யைச் சரியாகக் கட்டுறோம். "அதனால் தங்களது சம்பளத்தை மற்றவர் களிடம் சொல்வதில் யாருக்கும் எந்த விதத் தயக்கமும் இருக்காது என்று நம்புகிறேன். "எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தைச் சொன்னால் நானும் சொல்லத்தயார்," எனக் காட்டமாக பதில் கூறினார் ரகுல்.

