பார்வதி நாயர் பெரிய நடிகர்களுடன்தான் நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி யில், "பெரிய நடிகர்களுடன்தான் நடிப்பேன் என்று இல்லை. என் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக படங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். "பெரிய நடிகர்களுடனும் பெரிய இயக்குநர்களுடனும் தொடர்ந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சிதான். ஆனால் என்னு டைய கதாபாத்திரம்தான் முக்கி யம். என்னுடைய படங்களைப் பார்த்தாலே இது புரியும். இன்னும் நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன்.
"அதுபோல் நான் ஆசைப்பட்ட கதாபாத்திரத்திலும் இன்னும் நடிக்கவில்லை. எனது உண்மை யான சுபாவம் இதுவரை திரை யில் வெளிப்படவே இல்லை. "நான் ரொம்ப ஜாலியான பொண்ணு. ஆனா படங்களில் தொடர்ந்து சீரியஸான கதாபாத் திரங்கள்தான் கிடைக்கின்றன. "எனது உடல்வாகிற்கும் உண விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. "நான் எந்த உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பது இல்லை. நன்றாகச் சாப்பிடுவேன். தமிழ்நாட்டு உணவு வகைகளில் தோசை எனக்கு ரொம்ப பிடிக்கும். "தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை கொஞ்சம் குண்டாக இருந்தால்தான் ரசிகர் களுக்குப் பிடிக்கும்," என்று சொன்னார்.

