பட வாய்ப்புகள் குவியக் குவிய வயது கூடிக்கொண்டே இருப்பது தெரியாமல் சில நடிகைகள் தொடர்ந்து நடிப்பதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். திருமணம் எப்போது என்று கேட்டால், இப்பொழுது என்ன அவசரம்? நான் இன்னும் சின்னப் பெண்தான். அதற்கான காலநேரம் கைகூடும்போது எல்லாருக்கும் ஒளிவுமறைவின்றி சொல்லித்தான் செய்வேன் என்று பெருமையாக பிரபல நடிகை கள் பதில் கூறுவது வழக்கம்.
இதுபோலவே நீண்ட நாளாகக் கூறி வந்த முன்னணி நடிகைகளான அனுஷ்காவும் திரிஷாவும் இப்போது திருமணப் பந்தத்தில் இணைய தயாராகி விட்டதாக டோலிவுட், கோடம்பாக்கத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. தமிழ், தெலுங்குப் பட உலகில் நயன்தாராவுக்குக் கடும் போட்டியாக வளர்ந்தவர் அனுஷ்கா.
'இஞ்சி இடுப்பழகி' படத்தில் உடல் பருமனான பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அதிக மாக சாப்பிட்டு உடல் எடையைக் கணிசமாகக் கூட்டினார். அந்தப் படம் வெளியான பிறகு உடற் பயிற்சிகள், யோகா, உணவுக் கட்டுப்பாடு என உடம்பை வறுத்தி எடையைக் குறைப்பதற்கு முயன்றார். ஆனாலும் பயனில்லை. 'பாகுபலி 2' படத்தில் கணினித் தொழில் நுட்பத்தின் மூலம் உடம்பை ஒல்லியாக மாற்றி னர். அதிக எடை கூடியதால் அனுஷ்காவுக்குப் புதிய படங்கள் எதுவுமில்லை.
அவர் கடைசியாக நடித்த 'பாக்மதி' ஜனவரியில் வெளிவந்தது. இதனால் அவருக்குத் திருமணத்தை முடிப்பதற்கு பெற்றோர் மணமகனைத் தேடி வருகிறார்கள். அனுஷ்காவுக்கு இப்போது 36 வயதாகிறது. அவருக்கு 40 முதல் 45 வயதுடைய மருத்துவர், பொறியாளர், தொழில் அதிபர் வரன்களாக அதிகம் வந்து குவிகின்றதாம். ஆனால் இவர்கள் யாரையும் அனுஷ்காவுக்குப் பிடிக்கவில்லையாம்.

