இரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை

இரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை

1 mins read
a55243dd-76da-40da-b968-305df7f83ca0
-

இப்போதெல்லாம் சர்ச்சைகள் எழுவதுதான் ஒரு திரைப்படத் துக்கான ஆகப் பெரிய விளம்பர மாகக் கருதப்படுகிறது. எனவே, புதிய படங்கள் வெளியீடு காணும்போது ஏதேனும் சர்ச்சைகள் கிளம்பினால் அதைத் திரையுலகத்தினர் விரும்புவதாக வும் கூறப்படுகிறது. அண்மையில் பல்வேறு விவா தங்களை எழுப்பிய படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. படத் துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததே நல்ல விளம்பரமாக அமைந்து, நல்ல வசூல் கண்டது. இந்நிலையில், இதன் இரண் டாம் பாகம் தயாராகிறது. எனினும் இதில் நாயகனாக நடிக்கப் போவது கௌதம் கார்த்திக் அல்ல. புது நாயகனை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் வெளியாவதற்கு முன்பே சில எதிர்ப்புகள் இருந்தன. இயக்குநர் பாரதிராஜா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகவே இப்படத் துக்குக் கண்டனம் தெரிவித்தனர். சந்தோஷ் ஜெயக்குமாரோ இதையெல்லாம் கண்டுகொள் வதாக இல்லை. அதிகம் அலட்டிக் கொள்ளாமல், இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்கி உள்ளார். "முதல் பாகத்தின் முடிவில் சில சம்பவங்கள் நடக்கும். அந்த அடிப்படையில் பார்த்தால் கௌதம் கார்த்திக்கால் அடுத்த பாகத்தில் நடிக்க முடியாது. எனவே, வேறொரு நடிகரை வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறேன்," என்கிறார் சந்தோஷ் ஜெயக்குமார்.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் ஒரு காட்சி