பி.எஸ்.மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக் கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தற்போது பாண்டிராஜ் இயக் கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத் தில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி. 'வனமகன்' சயீஷா நாயகி யாக நடித்துள்ள இந்தப் படத்தில், 'மேயாத மான்' பிரியா பவானிசங்கர் கார்த்தியின் மாமன் மகளாக வருகிறார். அடுத்து, அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. அதைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அல்லது விக்ரமை இயக்கப் போகிறார் பி.எஸ்.மித்ரன் என்று பேச்சு அடி பட்ட நிலையில், கார்த்தி ஒப்பந்த மாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி 'இரும்புத்திரை' இயக்குநர்
1 mins read
-

