மதுரை பின்னணியில் உருவாகும் 'காலக்கூத்து'

மதுரை பின்னணியில் உருவாகும் 'காலக்கூத்து'

1 mins read
7de0f168-39e7-482f-8f6c-672cc625cb43
-

மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள புதுப் படம் 'காலக்கூத்து'. நாகராஜன் இயக்கி உள்ளார். பிரசன்னா, கலையரசன், தன்‌ஷிகா, சிருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஓர் இளம் ஜோடியின் வாழ்க்கையில் காலம் எப்படிப்பட்ட கூத்துகளை நடத்துகிறது என்பதை சுவாரசியமாக சொல்லப் போகிறார்களாம். "மதுரை பின்னணியில் எத்தனையோ படங்கள் வந்துள்ளன. ஆனாலும், இப்படம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும். மதுரையில் யாருமே படமாக்காத இடத்தில் பெரும்பாலான காட்சிகளை எடுத்துள்ளோம்," என்கிறார் இயக்குநர்.