இந்திப்பட வாய்ப்புகள் குவிவதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தா லும் அவற்றை ஏற்க மறுத்து விடுகிறாராம் டாப்சி. நடிக்க வந்த புதிதில் இவருக்கு கைகொடுத்தது தமிழ்ப் படங்கள்தான். ஆனால் இப்போது தமிழில் நடிக்கவும் இவர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது நான்கு இந்திப் படங்களில் நடித்து வருகிறார் டாப்சி. அடுத்து அமிதாப்பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார். சுஜாய் கோஷ் இயக்கும் இந்தப் படம் திகில் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஏற்கெனவே அமிதாப்புடன் 'பிங்க்' படத்தில் நடித்துள்ளார் டாப்சி. இந்நிலையில் இளம் தமிழ் இயக்குநர் ஒருவர் தமது படத்தில் நடிக்கும்படி கேட்டு டாப்சியை அணுகினாராம். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கால்ஷீட் இருக்க வாய்ப்பே இல்லை என்று நடிக்க மறுத்துவிட்டாராம் டாப்சி.
தமிழில் நடிக்க மறுக்கும் கதாநாயகி டாப்சி
1 mins read
-

