ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் 'எல்.கே.ஜி.'

ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் 'எல்.கே.ஜி.'

1 mins read
01b30521-ba05-4d8c-be07-f4af53554f24
-

நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் கதாநாயக னாக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நாயகனாக நடிக்கும் படம் 'எல்.கே.ஜி'. அண்மையில் சென்னையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவ ரொட்டிகளில் ஆர்.ஜே.பாலாஜி அரசிய லுக்கு வரப்போவதாகக் குறிப் பிடப்பட்டிருந்தது. இதனால் திரை ரசிகர்கள் மத்தியில் இரண்டொரு நாட்கள் பரபரப்பு நிலவிய நிலையில், 'எல்.கே.ஜி' படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்க இருப்பதாக தெளிவுபடுத்தினார் பாலாஜி. இதையடுத்து அப்படத்தின் முதல்தோற்ற சுவரொட்டி வெளியானது. இது அரசியல் நையாண்டிப் படமாக இருக்குமாம். கதை, திரைக்கதை ஆகியவற்றுக்கும் பாலாஜியே பொறுப்பேற்றுள்ளார். நடிகர் ஐசரி கணேஷ் தயாரிக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஜோடியாக நடிப்பவர் பிரியா ஆனந்த்.

'எல்கேஜி' படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த்.