அமலா: நல்ல கிசுகிசுக்களை வரவேற்பேன்

அமலா: நல்ல கிசுகிசுக்களை வரவேற்பேன்

1 mins read
0cf40213-12a7-4e90-8127-39313e6f432e
-

"இப்போது நான் நல்ல பாதையில் செல்வதாக கிசுகிசுக்கள் தெரிவிக்கின்றன. எனவே அதை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை," என்கிறார் அமலா பால். எனினும் தனது செயல்பாட்டில் தவறு இருப்பதாகச் சிலர் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அத்தவறை திருத்திக் கொள்வதாக குறிப்பிடுபவர், வேடிக்கைக்காக எழுதப்படும் கிசுகிசுக்களையும் சிரித்தபடியே புறக்கணித்து விடுவதாகச் சொல்கிறார். "சும்மா வேடிக்கையாக வரும் கிசுகிசுக்களை நானும் அப்படியே எடுத்துக்கொள்வேன். தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அவற்றைத் திருத்திக் கொள்ள நான் தயங்கியதே இல்லை. "வெறுமனே கோபப்படுவதால் மட்டும் பலன் இல்லை.

"மாறாக, நம் மீது ஏதேனும் தவறுகள் இருப்பின், அவற்றைச் சரி செய்து கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும்," என்று சொல்லும் அமலா பால், தற்போது தமிழிலும் மலை யாளத்திலும் நடிப்பதற்கான நல்ல வாய்ப்பு களைப் பெற்று வருகிறார். "தற்போது நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறேன். அதனால் மனதுக்கு நிறைவாக உள்ளது. திரையுலகில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை நன்றாக உணரமுடிகிறது. "இவை அனைத்துமே நல்ல மாற்றங்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை. இப்படிப்பட்ட மாற்றங்கள் தொடர்ந்து நிகழவேண்டும் எனவும் விரும்புகிறேன்," என்கிறார் அமலா பால்.