வாழ்க்கையில் ஒருவரைப் பிடிக்கும் என்று சொல்வதைவிட, அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதை நடை முறையில் செய்து காட்ட வேண்டும் என்றார் நடிகர் சிம்பு. திரைத்துறையில் தாம் வளர்ச்சி அடைய தமது பெற்றோர்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி இருக்கும் 'எழுமின்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய சிம்பு, பாடல், முன்னோட்ட வெளியீடு போன்ற விழாக் களில் தாம் வழக்கமாகப் பங்கேற்ப தில்லை என வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.
"காரணம் என் பேச்சு தான். கையில் மைக் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சி னையை கிளப்பும்," என்று சிம்பு கூறிய போது பலத்த கைதட்டல் எழுந்தது. 'எழுமின்' தற்காப்புக் கலையை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதைக் குறிப்பிட்ட சிம்பு, பெற்றோர் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார். "படிக்க, கற்றுக்கொள்ளத்தான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகி றோம். ஆனால், முதலாவதாக வரும் ஒருவனை மட்டும் தான் பார்க்கிறார்கள். அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. "ஒரு குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்றால் அதற்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான பயிற்சி அளிக்க முயற்சிப்பதில்லை. ஆனால் தண்டிக்க மட்டும் செய்கி றார்கள். "ஒவ்வொரு பெற்றோரும் குழந் தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர அவர்களை ஊக்குவிக்க வேண்டும்," என்று சிம்பு வலியுறுத்தினார்.
போட்டி, பொறாமை எதற்கு எதை எடுத்துக்கொண்டு போகிறோம். மனதில் பட்டதைத்தான் நான் பேசுவேன். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட்டபோது, அவரது பேச்சில், முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்ட சிம்பு, தாம் எதையும் யோசிக்காமல் செய்ததில்லை என்றார். "விஷால் மீது கோபப்பட்டு, திட்டி இருக்கிறேன். அவர் செய்த ஒரு விஷ யம் பிடிக்கவில்லை என்பதால் அடுத் தடுத்து அவர் செய்யும் அனைத்துமே தவறாகி விடாது. "நடிகர் சங்கம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா விற்கு மனிதாபிமானத் துடன் என்னை அழைத்த விஷாலுக்கு நன்றி. எனக்கு பிடித் ததை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன்.

