எப்போது கதாநாயகனாக நடிக்கத் துவங்கினாரோ அப்போதே சந்தானத்துக்கு பிரச்சினையும் தொடங்கி விட்டது போலும். அவர் நாயகனாக நடித்த படங்கள் வசூல் ரீதியில் தயாரிப்பாளர் களுக்கு திருப்தி ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இதனால் அவரை வைத்து அடுத்தடுத்து படம் தயாரித்தவர்கள் தயக்கத்தில் உள்ளனராம். எனவே தன்னுடன் வேறு சில முன்னணிக் கலைஞர்களையும் இணைந்து பணியாற்ற வைப்பதாகவும், அதன் மூலம் படத்துக்கு விநியோகிப்பாளர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும் என்றும் கூறி விநியோகிப்பாளர்களை சமாளித்து வருகிறாராம் சந்தானம். இதனிடையே அவர் நடிப்பில் வெளியாக உள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் வெற்றியைப் பொறுத்தே சந்தானம் கதாநாயகனாக நடிப்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
'சர்வர் சுந்தரம்'
1 mins read
-

