கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ்

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ்

1 mins read
044945e2-7f4e-41dc-b89d-afd64443311d
-

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் நடிக்கும் பூமராங் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பொறியியல் கல்லூரி மாணவராகவும், காற்பந்து வீரராகவும் வருகிறார் அதர்வா. தகவல் தொடர்புத்துறை (விஸ்காம்) மாணவியாக வருகிறார் மேகா ஆகாஷ். அண்மையில் நடைபெற்ற திரைத்துறை வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இழந்த நேரத்தை ஈடுகட்டும் வகையில் தினமும் இடைவிடாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம். "தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே ஓய்வெடுக்கிறோம். அப்போதுதான் குறித்த நேரத்தில் படப்பிடிப்பையும் இதர பணிகளையும் முடித்து படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியும். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்," என்கிறார் மேகா ஆகாஷ்.