திகில் படத்தில் அஞ்சலி

திகில் படத்தில் அஞ்சலி

2 mins read
009eb7c1-04e3-4548-ba03-f773e0e5d169
-

நடிகை அஞ்சலிக்கு இது ஏறுமுகமான காலம் எனக் கூறலாம். அண்மையில் வெளியான 'காளி' படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாகப் பாராட்டப்படுகிறது. அடுத்து 'லிசா' என்ற திகில் படத்தில் நடிக்க உள்ளாராம். இந்தியாவின் முதல் (திண்மத் தோற்றம் காட்டக் கூடிய முப்பரிமாணப் படம்) 'ஸ்டெரோஸ்கோபிக் 3டி' படமாக இது உருவாகிறது. ராஜூ விஸ்வநாத் இயக்கும் இப்படத்தை, 'மதுரவீரன்' பட இயக்குநர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார்.

"வழக்கமாக திகில் படம் என்றால் மர்மமான பகுதியில் ஒரு வீட்டைக் காண்பிப்பார்கள். அந்த வீட்டுக்கு வந்து தங்கும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். அதிகப்படியான ஒப்பனை யுடன் ஒரு பேய் உலாவிக் கொண்டிருக்கும். அது பலரைப் பழிவாங்கும் என்பதாக கதை நகரும். ஆனால் இந்தப் படம் அப்படிப்பட்டதாக இருக்காது. முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களத்துடன் ரசிகர்களைச் சந்திப்போம். இயக்குநர் என்னிடம் கதையைச் சொன்ன போது அதன் மீது நூறு விழுக்காடு நம்பிக்கை வந்துவிட்டது," என்கிறார் அஞ்சலி. இந்த கதாபாத்திரத்துக்காக தேர்வு செய்த தற்கு முக்கிய காரணங்கள் உள்ளனவாம்.

அஞ்சலிக்கு நன்றாக தமிழ் பேச வரும் என்பதும் அவற்றுள் ஒன்று. "தமிழ், தெலுங்கு என ஒரே சமயத்தில் இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. எனவே இரு மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய நாயகி இருந்தால் வசதியாக இருக்கும் எனக் கருதினோம். "அஞ்சலி இதற்கு பொருத்தமானவராக இருந்தார். எனவே அவரை ஒப்பந்தம் செய்தோம். இதுவரை அஞ்சலியை நடுத்தர அல்லது ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகவே பார்த்து வந்திருக்கி றோம். இப்படத்தில் நவநாகரிகப் பெண்ணாக வருகிறார்," என்கி றார் ராஜீவ் விஸ்வநாத்.