மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி

1 mins read
be026d7e-df8f-47b9-aa5b-0b926a8b33d7
-

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்கள் உள் ளன. அங்கிருக்கும் இறைவனுக்கு பரியேறும் பெருமாள் என்பது பெயர். குதிரை வாகனத்தில் அமர்ந்து ஊர்வலம் வருவதால் இப்பெயரால் பக்தர்கள் அழைக்கி றார்கள். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் "பரியேறும் பெருமாள்" என்ற தலைப்பில் படம் தயாரித்துள்ளது. மாரிசெல் வராஜ் இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.

தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிக ளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டி ருக்கும் பிரிவினை படிநிலைக ளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை யும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படைப்பாக உருவாக்கப்பட்டிருக்கி றதாம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் தரப்புக்கு இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து ஒரு பாடலை எழுதியும் இருக்கிறார்கள்.