தமிழகத்தையே உலுக்கிய இளம் பெண் சுவாதி கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகி உள்ளது 'நுங்கம்பாக்கம்'. எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். முதலில் 'சுவாதி கொலை வழக்கு' என்றுதான் இப்படத்துக்கு தலைப்பு வைத்திருந்தனராம். பிறகு சில காரணங்களால் 'நுங்கம்பாக்கம்' என மாற்றி உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவமே தற்போது திரைப் படமாகிறது. இந்த சுவாதி கதா பாத்திரத்தில் ஆயிரா நடித்துள்ளார். காவல் ஆய்வாளர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, படத்தை இயக்குவ தில் எதிர்கொண்ட சில பிரச்சி னைகளை விவரித்தார் ரமேஷ். "ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்துவிட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது. சிறைக்கு மட்டும் தான் போகவில்லை. மற்றபடி, அனைத்து விதமான பிரச்சினைகளையும் சந்தித்து விட்டேன். "எனக்கு வேறு வேலை தெரி யாது. சினிமா மட்டும்தான் தெரி யும். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் இது நல்ல படம் எனப் பெயரெ டுக்கும்," என ரமேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

