திரைப்பட விழா ஒன்றில் இளம் கதாநாயகி மேடையேறி கதறி அழுதால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ஒரு பரபரப்பை நேற்று முன்தினம் ஏற்படுத்திவிட்டார் இளம் நாயகி அர்த்தனா. வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'செம' படத்தில் இவர்தான் கதாநாயகி. ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார். ஏற்கெனவே 'தொண்டன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அர்த்தனா. நேற்று முன்தினம் 'செம' படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் அர்த்தனா வுக்கும் பேச வாய்ப்பு கிடைத்தது.
அப்போது திடீரென உணர்ச்சி வசப்பட்டு அவர் அழுததைக் கண்டு அரங்கில் இருந்த அனைவரும் அதிர்ந்து போயினர். ஒருவேளை படக்குழுவினருடன் அவருக்கு ஏதேனும் மோதலோ எனும் முணுமுணுப்பும் எழுந்தது. நல்லவேளையாக அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையாம். அழுததற்கான காரணத்தை அர்த்தனாவே விவரித்தார். "படப்பிடிப்பில் இயக்குநரோ தயாரிப்பாளரோ எனக்குத் தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. "நான் எளிதில் உணர்ச்சிவசப்படுவேன். படப் பிடிப்பில் இயக்குநரும் சக நடிகர்களும் கஷ்டப் பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கை யும் இந்தப் படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓடவேண்டும் என்ற எதிர் பார்ப்பில் அழுகை வந்தது. "இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். அடுத்து 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்," என்றார் அர்த்தனா.

