எந்த மொழியாக இருந்தாலும் 'ஏ' சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிப்பதற்குத் தமக்கு விருப்பமில்லை என்கிறார் ஆர்யா. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிப்பதால் வயது வந்தோருக்கான படத்தில் நடிப்பீர்களா என்று பலரும் கேட்கிறார்களாம். இதையடுத்து, 'அப்படிப்பட்ட படங்களில் நடிக்கமாட்டேன்' என்று தெளிவுபடுத்தி உள்ளார். "விஷாலின் இரும்புத்திரையில் அர்ஜுன் சார் ஏற்றிருந்த அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நான் நடிக்க மறுத்தேன்.
அர்ஜுன் பேசிய வசனங்களை நான் பேசி இருந்தால் மக்கள் சிரித்து இருப்பார்கள்," என்கிறார் ஆர்யா. தற்போது 'கஜினிகாந்த்', 'சந்தனதேவன்' ஆகிய இரண்டு படங்கள்தான் ஆர்யா கைவசம் உள்ளன. நிறைய கதைகளைக் கேட்டு வருகிறாராம். தான் பங்கேற்ற 'எங்க வீட்டு மாப் பிள்ளை' தொலைக்காட்சி நிகழ்ச்சி யால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து கூறுகையில், "என் சொந்த வாழ்க் கையைப் பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக்கொண்டேன்," என்கிறார்.

