கார்த்திக் சுப்புராஜின் படத்தில் ரஜினியுடன் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுபற்றி விஜய் சேதுபதி கூறுகையில், "இந்தப் படத்தின் கதை கூட எனக்குத் தெரியாது. திரையுலகில் ஒரு சிலரை நான் நம்புவேன். அவர்களில் கார்த்திக் சுப்புராஜ் ஒருவர். அவர் நடிக்க கூப்பிட்டால் உடனே ஒப்புக்கொள்வேன். அதேபோல் ரஜினியின் நடிப்பை இதுவரை திரையில் மட்டுமே பார்த்திருந்த நான் அவர் நடிப்பை நேரில் பார்க்கும் அனுபவத்தை பெறவேண்டும் என்பதற்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்றார் விஜய் சேதுபதி.
நண்பரை நம்பும் விஜய் சேதுபதி
1 mins read
-

