வசூல் குறைவு: வருந்தும் ஷாம்லி

வசூல் குறைவு: வருந்தும் ஷாம்லி

1 mins read
7e473e23-14a4-47c6-bce3-7916ce66c9d7
-

பொதுவாக ஒரு படம் வெளியாகவில்லை என்றால் தான் வருத்தப்படுவார்கள். ஆனால் அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லியோ தான் நடித்த படம் வெளியானதால் வருத்தத்தில் மூழ்கியுள்ளாராம். தமிழில் 'வீர சிவாஜி' படம் மூலம் அறிமுகமானார் ஷாம்லி. விக்ரம் பிரவுடன் ஜோடியாக நடித்த அந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் உரிய வரவேற்பு இல்லை. இதையடுத்து, தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் ஷாம்லி. அங்கு நாகசௌரியாவுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். 'அம்மம்மா கரிலு' என்ற பெயரில் அண்மையில் வெளியானது அப்படம். கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு திருப்திகரமாக இல்லையாம். இதுதான் ஷாம்லியின் வருத்தத்துக்குக் காரணம்.

மேலும்