ரகுல்: இதுவே எனது பலம்

ரகுல்: இதுவே எனது பலம்

1 mins read
3abdbf20-afc6-44b9-8eb3-e9be8443051a
-

நடிகைகள் எந்த மொழிப் படத்தில் நடிக்கிறார்களோ அந்த மொழியை யும் அதன் கலாசாரத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்கி றார் ரகுல் பிரீத் சிங். அப்போதுதான் கதாபாத்திரத் தின் தன்மைக்கேற்ப உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். "மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. நான் தமிழை யும் கற்று வருகிறேன். இந்திப் படத்தில் நடித்து வருவதால் எனக்கு தென்னிந்திய மொழிகளில் படங்கள் குறைந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள்.

"தென்னிந்திய மொழிப் படங் களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். தமிழ் ரசிகர்கள் என்னைத் தமிழ் பெண் ணாகப் பார்க்கிறார்கள், தெலுங்கு ரசிகர்கள் தெலுங்குப் பெண்ணாகப் பார்க்கிறார்கள். இதுவே எனது பலம்," என்கிறார் ரகுல்.