அண்மைக் காலமாக இளம் நாயகி சாயிஷா சைகல் தன் வாயைத் திறந்தால் ஒரே விஜய் சேதுபதி புராணமாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை சேதுபதிதான் நிஜத்திலும் கதாநாயகனாம். வேறொன்றுமில்லை 'ஜுங்கா' படத்தில் சேதுபதியுடன் இணைந்து நடித்தபோது எதிர்கொண்ட அனுபவங்கள்தான் சாயிஷாவை இப்படிப் பேசவைத்துள்ளது. அப்படத்துக்காக அசர்பைஜான் நாட்டில் ஒரு கார் துரத்தல் காட்சியைப் படமாக்கினார்களாம். இதற்காக 'டூப்' வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குநர் சொன்னபோதும், அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி தாமே நடித்தாராம். "காட்சிப்படி நானும் அவரும் காரில் செல்வோம். அப்போது அந்தக் கார் துரத்தப்பட்டு பயங்கரமாக நொறுங்கும். முற்றிலும் ஒரு புது நாட்டில், பயங்கரமான துரத்தல் காட்சிக்காக காரை படுவேகமாக ஓட்டிச் செல்வது மிக ஆபத்தான செயல். ஆனால் சேதுபதி மிகத் துணிச்சலாக செய்துகாட்டினார்," என்கிறார் சாயிஷா.
சேதுபதியைப் புகழும் கதாநாயகி
1 mins read
-

