அதிரடி வேடங்களை விரும்பும் காஜல்

அதிரடி வேடங்களை விரும்பும் காஜல்

1 mins read
b54fc7f9-2e1d-4f3f-bd51-6bec663ffd80
-

அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்கவேண்டும் என விரும்புகிறாராம் காஜல் அகர்வால். அதேபோல் நகைச்சுவை வேடங்களில் நடிக்கவும் தயாராம். சினிமா உலகில் தேடி வரும் வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை மட்டுமே தேர்வு செய்வதாகக் குறிப்பிடுபவர், நடிப்பு என்று வந்துவிட்டால் மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்கிறார். "எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் கதை நன்றாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அது வெளிநாட்டு மொழிப்படமாக இருந்தாலும் நடிப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தரும். "தனிப்பட்ட முறையில் சொல்வதானால், உணர்வுப்பூர்வமான, காதல் கதைகளை விரும்புகிறேன். மொழிப் பாகுபாடு இன்றி அனைத்து மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்கிறார் காஜல். எனினும், இதுவரை அதிரடி கதாபாத்திரங்கள் தனக்கு அமையவில்லை என்று சொல்பவர் அத்தகைய வேடத்தில் நடிப்பதே தனது கனவு என்கிறார்.