திரு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இப்படம் ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கவுதம் கார்த்திக்கும் ரெஜினாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இருவரும் இணைந்துள்ள பாடல் காட்சிகள் இளம் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்குமாம்.
அந்தளவு நெருங்கி நடித்திருப்பதாகத் தகவல். மேலும் கவுதம் தன் தந்தை கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. கதைப்படி குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளாராம். எனவே அதிரடியான சண்டைக் காட்சிகளையும் எதிர்பார்க்கலாம். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

