'வரவேற்கத்தக்க மாற்றம்'

'வரவேற்கத்தக்க மாற்றம்'

1 mins read
e051edcd-8096-4e0b-a105-f9cce098917c
-

'பருத்திவீரன்' படத்துக்காக தேசிய விருது பெற்ற பிரியாமணியை அண்மைக் காலமாகத் தமிழ்ப் படங்கள் எதிலும் பார்க்க முடியவில்லை. ஆனால் தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறாராம். தனக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கி, தேசிய விருதும் பெறவைத்த தமிழ்த் திரையுலகத்தைத் தம்மால் மறக்கவே இயலாது என்கிறார் பிரியாமணி. திருமணமான பிறகு தமிழ்ப் படங் களில் நடிப்பதில் இடைவெளி ஏற்பட் டுள்ளது என்பதை ஒப்புக்கொள்பவர், தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் வாய்ப்புகள் தம்மைத் தேடி வருவதாகச் சொல்கிறார். அண்மையில் கதாநாயகிக்கு முக்கி யத்துவம் தரும் படங்கள் அதிகரித் திருப்பது நல்ல விஷயம் என்கிறார் பிரியா.

"இப்போதாவது நடிகைகளுக்கும் தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்புக் கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்கிறேன். அதற்காக வணிக ரீதியிலான படங்களைக் குறை கூறவில்லை. ஒரு நடிகையின் சினிமா வாழ்க்கையில் அத்தகைய படங்களும் அவசியம் இடம்பெற வேண்டும்.

மேலும்