சண்டக்கோழி -2ல் வரலட்சுமி

1 mins read
210ec5d5-7137-45a1-aad1-a9e4e9ce9bb6
-

நிஜ வாழ்க்கையில் காதலர்கள் என நம்பப்படும் விஷாலும் நடிகை வரலட்சுமியும் திரையில் மோத உள்ளனர். 'சண்டக்கோழி 2'ல் வில்லத்தனத்தில் அசத்தியுள்ளாராம் வரலட்சுமி. இதுவரை இப்படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகளைத் திரை யிட்டுப் பார்த்தாராம் விஷால். அப்போது வரலட்சுமியின் வில்லத்தனம் அவரை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. 'சண்டக்கோழி' முதல் பாகத்தில் வில்லனாக நடித்த லால் மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார். அதற்கு இணையான வில்லத்தனத்தை வரலட்சுமியும் திரையில் வெளிப்படுத்தி உள்ளார் என்று தனது நண்பர்களிடம் சொல்லி பாராட்டி வருகிறாராம் விஷால். 'சண்டக்கோழி -2'ன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தேனி பகுதியில் துவங்க இருக்கிறது.

மேலும்