'சார்லி சாப்ளின் 2'

'சார்லி சாப்ளின் 2'

1 mins read
37c1df64-b89a-4785-9a6f-d08550b4c501
-

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் 'சார்லி சாப்ளின்-2'. இதில் அவரது ஜோடியாக நிக்கி கல்ராணியும் அதா ஷர்மாவும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பிரபு தோன்றுகிறார். இவர்களுடன் ரவி மரியா செந்தில், ஆகாஷ், வைபவ் உள்ளிட்ட பலரும் உள்ளனர். "பிரபு தேவா, நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக இருவரது குடும்பத்தினரும் திருப்பதிக்குப் போகிறார்கள்.

அப்போது நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே இப்படம். திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது ரகசியம்," என்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். 'சார்லி சாப்ளின்' முதல் பாகத்தையும் இவர்தான் இயக்கினார். டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அம்ரீஷ் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் யுகபாரதி இயற்றியுள்ளார்.

மேலும்