அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'தமிழ்ப் படம்'. இதன் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. 'தமிழ்ப் படம் 2' என்ற பெயரில் தயாராகி வரும் இடத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியிடப்பட்டது. முழு நீள நகைச்சுவைப் படமாக தயாராகி வரும் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி 40 நிமிடங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீசரில், 'துப்பாக்கி', 'மெர்சல்', 'துப்பறிவாளன்', 'மங்காத்தா', 'விவேகம்', 'விக்ரம் வேதா', 'சிங்கம்' போன்ற படங்களைக் கிண்டல் செய்யும்விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 2018-06-02 06:30:00 +0800
'தமிழ்ப் படம் 2' முன்னோட்டக் காட்சி வெளியானது
1 mins read
-

