திரைத்துறையிலிருந்து பலரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி பதில் அளித்திருக்கிறார். தூத்துக்குடி சம்பவம் மட்டுமல்லாமல் மக்கள் போராட்டங்களுக்கு எல்லாம் தனது குரலை உறுதியாக தருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு "அதற்கு நான் சரிப்படமாட்டேன். காரணம் எனக்கு மக்கள் மீது அக்கறை இருக்கும் அளவுக்கு அரசியல் அறிவு கிடையாது. அதற்கான சிந்தனையும்கூட எனக்கு இல்லை. அந்த அறிவு, சிந்தனை இல்லாமல் அந்த இடத்தில் போய் உட்காரக்கூடாது. 'இங்கே நடப்பது சரி' என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். சிலர் 'தவறு' என்று சொல்கிறார்கள். எனவே தெளிவான முடிவை நம்மால் எடுக்க முடியவில்லை.
விஜய் சேதுபதி: அரசியலுக்கு இளைஞர்கள்தான் வரவேண்டும்
1 mins read
-

