ஜான்வி: என்னைக் கவர்ந்தவர் தனுஷ்

ஜான்வி: என்னைக் கவர்ந்தவர் தனுஷ்

1 mins read
f233d0b2-0a33-4935-934a-c52cda63f3fb
-

இந்தித் திரையுலகில் ஸ்ரீதேவியைப் போலவே அவருடைய மகள் ஜான்வியும் கனவுக் கன்னியாக வருவாரா எனப் பாலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜான்வி நாயகியாக அறிமுகமாக உள்ள படம் 'தடக்'. இந்தப் படம் ஜூலை 20ஆம் தேதி வெளியாக உள்ளது. அண்மையில் 'தடக்' படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் கரண் ஜோகர், ஜான்வியைப் பத்திரிகை ஒன்றிற்காகப் பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் தென்னிந்திய நடிகர்களில் தன் மனம் கவர்ந்த நடிகர் தனுஷ் எனப் பதிலளித்தார். காரணம் கேட்டதற்கு "தனு‌ஷின் கதாபாத்திரங்களும் நடிப்பும் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டது," என்று பதிலளித்தார் ஜான்வி.

மேலும்