'இரட்டை அர்த்த வசன படங்களில் இனி நடிக்க மாட்டேன்'

'இரட்டை அர்த்த வசன படங்களில் இனி நடிக்க மாட்டேன்'

1 mins read
176ff2bf-41d0-45f9-889f-62bad7f6ca9f
-

மலையாளத்தில் கிராமத்து வேடத்தில் நடித்திருந்தாலும் முதன் முதலாக 'பக்கா' என்ற தமிழ்ப் படத்தில், படம் முழுவதும் கிராமத்து வேடத்தில் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது என்கிறார் நாயகி நிக்கி கல்ராணி. பெரியவர்களுக்கான இரட்டை அர்த்த முள்ள வசனங்கள் உள்ள படங்களில் நடிக்க பல நடிகைகள் தயங்கும்போது நீங்கள் எப்படித் துணிச்சலாக 'ஹர ஹர மகாதேவகி' படத்தில் நடித்தீர்கள் என்று கேட்டதற்கு, "இனி அந்தப் படத்தைப் பற்றி பேசாதீர்கள். அந்தப் படத்தில் ஒரு கல்லூரி மாணவிக்கான வரைமுறையுடன்தான் என்னுடைய வேடம் இருந்தது. ஆனால் படம் முடிந்து பார்த்தபோது சிறிது வருத்தமாக இருந்தது. இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்," என்று கூறினார் நிக்கி கல்ராணி.

மேலும்