விஜய் சேதுபதியும் டுவிட்டரில் இணைந்தார்

விஜய் சேதுபதியும் டுவிட்டரில் இணைந்தார்

1 mins read
d8170f78-40fb-42e3-934a-70714673cb95
-

இதுவரை விஜய் சேதுபதி டுவிட்டரில் கணக்கு வைத்திருக்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் பெயரில் "தமிழ்நாட்டில் யாராவது வந்து நல்லது செய்யட்டும் என்கிற எண்ணத்தைவிட ரஜினியால் எந்த ஒரு நல்லதும் நடந்துவிடக்கூடாது என்கிற பதட்டம்தான் இங்கு இருக்கிறது," என்கிற பதிவு இணையத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. விஜய் சேதுபதி பெயரில் இதுபோல மேலும் சில போலி பதிவுகளும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றன.

அவற்றிற்கு முடிவு கட்ட விஜய் சேதுபதி உண்மையாகவே நேற்று டுவிட்டர் கணக்கைத் திறந்திருக்கிறார். தான் அதுபோன்ற பதிவை வெளியிடவில்லை என்று மறுப்பும் தெரிவித்து இருக்கிறார். அவருடைய முதல் பதிவே போலி கணக்குகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது. இனி, விஜய்சேதுபதியிடமிருந்து சுவாரசியமான பல தகவல்களை அவருடைய டுவிட்டரில் காணலாம்.

மேலும்